"பிக்பாஸும் மாலும் வேண்டாம்... காடும் மலையும் போதும்" - பழங்குடிகளுக்காகப் பேசும் ஜென் Z டீம்!
அந்த வண்ண, வண்ண சார்ட் பேப்பர்களில் தங்களின் பிஞ்சுக் கைகளை வைத்து, அதைப் பதிக்கிறார்கள் அந்தக் குழந்தைகள்.
" உங்களுக்குப் பிடிச்ச, நீங்க யாரு கூட இருந்தா ரொம்ப சந்தோஷமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பீங்களோ அவங்களோட பெயர்கள இந்த விரல்கள்ல எழுதுங்க..." என்று மோனிகா முன்நின்று சொல்ல, ஒவ்வொரு குழந்தையும் தலையைக் கவிழ்த்து, அந்தப் பிஞ்சு விரல்களில் பெரிய பென்சில்களைக் கொண்டு அவ்வளவு அழகாக எழுதுகிறார்கள்.
" அப்ப", " ஆம்மா ", " பட்டி" , " தாதா", " அண்ணன்", " அக்கா ", " அண்ணி " எனத் தங்களுக்குப் பிடித்த உறவுகளின் பெயர்களை எழுதுகிறார்கள் .
" ஒரு பட்டாம்பூச்சியை நீங்கப் போய் தொடும்போது, அது அமைதியா உட்கார்ந்திருக்குமா ? "
" ஒரு பட்டாம்பூச்சியை நீங்கப் போய் தொடும்போது, அது அமைதியா உட்கார்ந்திருக்குமா ? "
" இல்லை..."
" ஆமா... அன்னிக்கு சந்தோசு கையில அதப் புடிச்சுட்டு வந்தானே" என்று ஆளுக்கொரு பதிலைச் சொல்கிறார்கள். அதில் பலரும் "இல்லை" என்பதையே சொன்னார்கள்.
" ஒரு நாய நீங்க கோபத்தோட அடிக்கப் போற மாதிரி போனீங்கன்னா நாய் ஓடிப் போயிடுமில்ல, ஆனா, பாசமா அதுகிட்ட போய் தொட்டீங்கன்னா ? அழகா, அமைதியா உங்கக் கூட இருக்கும் தானே ? " என்ற இலக்கியா தொடர்ந்து,
" அதுமாதிரிதான் உங்கள யாராவது தொடும்போது , அவங்க அன்பா தொடற மாதிரி இருந்தா பரவாயில்ல, ஆனா, உங்களுக்குப் பிடிக்காத மாதிரி தொட்டாங்கன்னா அந்தப் பட்டாம்பூச்சி பறக்குற மாதிரி அவங்ககிட்டருந்து ஓடிடணும்...." என்று சொல்லி முடிக்க சிலருக்குப் புரிந்த மாதிரியும், பலருக்குப் புரியாத மாதிரியும் இருந்தது. "குட் டச், பேட் டச்" விவரத்தை குழந்தைகளுக்கு அவர்களின் வழி நின்று சொல்லித் தரும் சின்ன கதைதான் அது. தொடர்ந்து பல கதைகளைச் சொல்ல ஆரம்பித்தார் இலக்கியா. கதையை முடிக்கும் முன்னமே மழைத் தூற ஆரம்பிக்க , தமீஸ், இக்ரம், மோனிஷா, நவீனா, தர்ஷினி என எல்லோரும் ஃபுட்பாலை எடுத்துக்கொண்டு குழந்தைகளோடு விளையாட ஆரம்பிக்கிறார்கள்.
இப்போது இந்த சுற்றத்தைப் பாருங்கள். அது சத்தியமங்கலம் பகுதியிலிருக்கும் ஒரு மலையின் உச்சி. அதைச் சுற்றி கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெறும் மலைகளாகவும், காடுகளாகவும் மட்டுமே தெரிகின்றன. இந்தப் பள்ளிக்கூடத்தில் ஒரே ஒரு வகுப்பறை மட்டும்தான். அதுவும் ஷீட் போட்ட கட்டடம். பள்ளிக்கூடத்திலிருந்து சிறிது தூரம் நடந்தால், அந்தச் சின்ன மலை கிராமத்தைப் பார்க்க முடிகிறது. ஆங்காங்கே சில குடிசைகள். தலைகளில் தண்ணீர் குடங்களை சுமந்தபடி பெண்கள், மாடுகளை மேய்த்தபடி சில பாட்டிகள், நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருக்கும் இளைஞர்கள் என அந்தக் காட்சி பாரதிராஜா படங்களில் மட்டுமே இன்று பார்க்க முடியும்.
தாங்கள் கொண்டுவந்திருந்த பிஸ்கெட் பாக்கெட்களை குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு, அங்கிருந்த குடிசையின் முன் அமர்ந்து தங்கள் கதைகளைத் தொடங்குகிறது " இம்ப்ரின்ட்ஸ் " ( Imprints ) குழு...
" ண்ணா... நாங்க 4th ஸ்டாண்டர்ட்லேருந்து ஒண்ணா படிக்கிறோம். நாங்க எல்லாருமே ஒரே மாதிரி மைண்ட் செட் கொண்டவங்கன்னு சொல்ல முடியாது, ஆனா, சில விஷயங்கள்ல எங்க எல்லாருக்குமே ஒரே மாதிரியான கருத்து இருந்தது. படிக்குறது, வேலைக்குப் போறதுங்குறத மீறி ஏதாவது செய்யணும்ணு அந்த சின்ன வயசுல நாங்க பேசினத இப்பத்தான் கொஞ்சம் , கொஞ்சமா நிறைவேத்திட்டு இருக்கோம்..." என்று மினி இண்ட்ரோ கொடுத்த மோனிகாவைத் தொடர்ந்து பேச ஆரம்பித்தார் தமீஸ்.
" ஸ்கூலிங் முடிச்சதும் ஆளுக்கொரு பக்கம் காலேஜ்ல சேர்ந்தோம். 2014ம் வருஷம் முதல்ல ஏதாவது தொடங்கணும்ன்னு ப்ளான் செய்து, ஒரு சின்ன ஈவென்ட் நடத்தினோம். அதுல வந்த காசை ஈரோட்ல இருக்க குழந்தைகள் காப்பகத்துக்குக் கொடுத்தோம். அதுமாதிரி சின்ன, சின்னதா வேலைகள ஆரம்பிச்சோம்... அப்போதான் மோனிகாவோட அப்பா இங்க சத்தியமங்கலம் பக்கத்துல இருக்க ஒரு மலைகிராமத்துல மெடிக்கெல் கேம்ப் முடிச்சிட்டு வந்தார். அவருத் தான், சிட்டியில இருக்க பசங்களுக்கு உதவ நிறையப் பேர் இருக்காங்க, நீங்க ஏன் பழங்குடி குழந்தைகளுக்கு ஏதாவது செய்யக்கூடாதுன்னு கேட்டாரு... அந்தக் கேள்வியிலருந்துதான் எங்களோட இந்தப் பயணத்தை தொடங்கினோம்..." என்று தமீஸ் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மூர்த்தி அங்கு ரஜினி ஸ்டைலில் நடந்து வந்து,
" ண்ணோவ்... சாப்பாட்டு டைமாகிடுச்சு. நாங்கெல்லாம் சாப்பிடப் போறோம். நீங்களும் வர்றீங்களா ?" என்று கேட்டான். " இல்லடா ... நீங்கப் போய் முதல்ல சாப்பிடுங்க " என்று தமீஸ் சொல்லவும், " ஓகேய்ஸ்... பறக்காஸ்..." என்று சொல்லி ரஜினி ஸ்டைலிலேயே நடந்துப் போனான்.
" ண்ணோவ்... சாப்பாட்டு டைமாகிடுச்சு. நாங்கெல்லாம் சாப்பிடப் போறோம். நீங்களும் வர்றீங்களா ?" என்று கேட்டான். " இல்லடா ... நீங்கப் போய் முதல்ல சாப்பிடுங்க " என்று தமீஸ் சொல்லவும், " ஓகேய்ஸ்... பறக்காஸ்..." என்று சொல்லி ரஜினி ஸ்டைலிலேயே நடந்துப் போனான்.
" மூர்த்தி சூப்பரா நடிப்பான். ஒரு தடவை அவனை இங்க ஸ்கூல்லருந்து சென்னைக்கு ஒரு நிகழ்ச்சிக்குக் கூட்டிப் போயிருக்காங்க. அங்க வந்து நிறைய சினிமாக்காரங்க, மூர்த்தியோட நடிப்பப் பார்த்து புகழ்ந்து தள்ளிட்டாங்களாம். ஒரு அஸிஸ்டென்ட் டைரக்டர், தான் எடுக்க இருக்குற படத்துல மூர்த்தியை நடிக்க வைக்குறேன்னு வேற சொல்லியிருக்காரு... இப்படி இங்க இருக்க ஒவ்வொரு பசங்களுக்குள்ளும் ஒரு திறமை இருக்கு..." என்றார்.
இந்தப் பழங்குடி குழந்தைகள் கிட்ட இவ்வளவு நாளா இருக்கீங்க. அவங்ககிட்ட பிடிச்ச விஷயம் என்ன ?
" அவங்களுடைய தைரியமும், சுதந்திரமும்தான். எதுக்குமே பயப்பட மாட்டாங்க. க்ளாஸ்ல கேள்விகள் கேட்கறதுல தொடங்கி, காட்டுக்குள் நடக்கும்போது எதிர்கொள்கிற விலங்குகள் வரை எது குறித்துமே இவங்களுக்குப் பெரிய பயமே கிடையாது. அதே மாதிரி ரொம்ப சுதந்திரமானவங்க. " ஃபிங்கர்ஸ் ஆன் யுவர் லிப்ஸ் ", " சைலன்ஸ் " ன்னெல்லாம் சொல்லி அவங்கள அடக்கிட முடியாது. அவங்க போக்குல போய்தான் விட்டுப் பிடிக்கணும்."
நீங்கப் பார்த்ததுல இந்தக் குழந்தைகள் சந்திக்குற பெரிய பிரச்னை என்னவாக இருக்கு ?
" 'குழந்தைத் திருமணம்' தான். பெரும்பாலான மலை கிராமங்கள்ல , எட்டாவது வரைக்குமான ஸ்கூல்தான் இருக்கு. அதுக்கு மேல படிக்கணும்ன்னா, அவங்க அதிக தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். அதனால, வேற வழியே இல்லாம அவங்களுக்கு சீக்கிரமே கல்யாணம் செய்து வச்சிடுறாங்க. அதப் பார்க்கும் போதுதான் ரொம்பக் கஷ்டமாக இருக்கும்...." என்று இலக்கியா சொல்லி முடிக்க, மதிய உணவிற்கு எல்லோரும் தயாராகினர். மதிய உணவு தயாராக இன்னும் தாமதாகும் என்று கணேசன் அண்ணன் வந்து சொல்ல, அடுத்த வகுப்பிற்குத் தயாராகினர் "
இம்ப்ரின்ட்ஸ் " குழுவினர்.
" நாங்க இந்த மானவர்களுக்கு சொல்லித்தருவதுங்குறது
ரொம்ப கம்மிதான். ஆனால், அவங்ககிட்டருந்து நாங்க கத்துக்குறதுதான் அதிகம். இதோ
இன்னிக்கு, இயற்கை விவசாயி "அரச்சலூர்" செல்வம் ஐயா
வந்திருக்காரு. அவரு எங்களுக்கு எல்லாம், சில அடிப்படை
விவசாய முறைகளைச் சொல்லித்தர இருக்கிறார். " என்று சொன்னபடியே கடப்பாரை, மண்வெட்டி சகிதமாக களத்தில் இறங்குகிறது அந்த இளைஞர்
பட்டாளம்.
விவசாய வகுப்பு, குடிசையில்
உட்கார்ந்து பழங்குடி மக்களோடு உணவு, அவர்களோடு சின்ன
உரையாடல், பின்னர், மீண்டும்
குழந்தைகளோடு வகுப்பு என மாலை மங்கும் நேரம் வரை பரபரப்பாகவே இருந்தனர். கிளம்பும்
நேரம், அந்தக் குழந்தைகளோடு செல்ஃபிக்கள் பறந்தன. பல
குழந்தைகளும் " அக்கா... திரும்ப எப்ப வருவீங்க ? ", " ண்ணா அடுத்த தடவை எனக்கு நல்ல செருப்பா ஒண்ணு
வாங்கிட்டு வந்து தாங்க ...", " சீக்கிரம்
திரும்ப வாங்க..." என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அவர்களுக்கு விடை
கொடுத்தனர்.
அவர்களிடம் விடைபெற்றபடியே அந்தச் சின்ன லாரியில் ஏறினார்கள். அந்தக் கரடுமுரடான சாலையில் அந்த லாரி குலுங்கிப் போவது , அந்தக் காட்டின் அடர்த்தியை வெகுவாக உணரவைத்தது.
அவர்களிடம் விடைபெற்றபடியே அந்தச் சின்ன லாரியில் ஏறினார்கள். அந்தக் கரடுமுரடான சாலையில் அந்த லாரி குலுங்கிப் போவது , அந்தக் காட்டின் அடர்த்தியை வெகுவாக உணரவைத்தது.
" கல்லூரி முடிச்சப் பிறகும் கூட இதே மாதிரி நீங்க
எல்லோரும் ஒண்ணா இருந்து, இந்த வேலைகள மென்னெடுக்க முடியும்ன்னு
நினைக்கிறீங்களா ?"
" கண்டிப்பா
... நாங்க ஸ்கூல் படிக்கும்போதும் எல்லோரும், நாங்க காலேஜ்
போனதுக்கப்புறம் ஒண்ணா இருப்போமாங்குறத சந்தேகத்தோடவே பார்த்தாங்க. ஆனா, இப்போ வரைக்கும் ஒண்ணாத்தான் இருக்கோம். இன்னும் சொல்லப்
போனா. வேலைக்குப் போயிட்டாதான் நாங்க இன்னும் நல்லா வேலைகள செய்ய முடியும். அப்பா, அம்மா கொடுக்குற காச கொஞ்சம், கொஞ்சமா சேர்த்து
வைச்சு இப்படி செலவு பண்ண வேண்டியதில்ல, நாங்களே
சம்பாதிச்சு நிறைய விஷயங்கள இந்தக் குழந்தைகளுக்கு செய்யணும். ஒரே விஷயம் நாங்க
எதிர்பார்க்குறது என்னன்னா எங்கக்கூட இணைஞ்சு வேலை செய்ய இன்னும் நிறைய நண்பர்கள்
வேணும். நாங்க நாலு பேரா ஆரம்பிச்சு, இன்னிக்கு 20
பேர் வரை இதில் இருக்கோம். ஆனால், இதிலும்
எல்லோருமே முழு ஈடுபாட்டோட இருக்காங்கன்னு சொல்ல முடியாது... மாசத்துக்கு ஒரு வீக்
என்டாவது இது மாதிரி வந்து, எங்களோடு சேர்ந்து வேலை செய்ய எங்களுக்கு நிறைய
நண்பர்கள் வேண்டும்..." என்று அவர் சொல்லி முடிக்கவும் அந்தக் கரடுமுரடு சாலை
முடிந்து தார்ச்சாலை வந்தது. இங்கிருந்து வேனில் மலையிறங்கி, அடிவாரத்திலிருந்து காரை எடுத்துக்கொண்டு ஒவ்வொருவரும்
தங்கள் வீடுகளை நோக்கிப் பயணப்பட வேண்டும்.
இந்த இளைஞர்களோடு
சேர்ந்து நீங்களும் வேலை செய்ய விரும்பினால்...
தமீஸ் - 95663 18515
அந்த மறுநாள்
அவர்கள் கல்லூரிக்குச் செல்ல வேண்டும், அசைன்மென்ட்ஸ்,
பிரஷர், புராஜெக்ட்,
கேம்பஸ் இண்டர்வியூ என வேறு விதமான வாழ்க்கைச் சூழல்
அவர்களை இழுக்கும். இருந்தும் மற்றுமொரு வார இறுதியில் இந்தக் குழந்தைகளைச்
சந்திப்பதற்காக , ஆவலோடு அவர்கள் காத்திருப்பார்கள். அந்தக்
குழந்தைகளும் இவர்களைப் பார்க்க ஆசையோடு காத்துக் கொண்டிருப்பார்கள்





No comments:
Post a Comment